Sunday, September 9, 2012

நாஞ்சில் நாடு - அன்றும்! இன்றும்!

அன்று:
"பச்சை பசேலென்ற விளைநிலங்கள், அரண்போல் காத்திருக்கும் மலைகள், வானத்தை தொட்டு விளையாடத்துடிக்கும் கடல் அலைகள்" இது அன்றைய நாஞ்சில் நாட்டின் அழகுநிலை.

விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த நாஞ்சில் நாட்டில் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் அதிசயத்தை வேறு எங்கும் காண முடியாது.

அன்றைய நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மனாபபுரம் இருந்தது. 1550ம் ஆண்டிலிருந்து (கி.பி 1759 - 1798 வரை) ஆட்சி முடியும் வரை பத்மனாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது.
நாஞ்சில் நாட்டு மக்களின் பேச்சு, பாவனைகள், செயல்பாடுகள் எல்லாமே தமிழகத்திலிருந்து மாறுபட்டவை. 
  • மேடுபள்ளம் நிறைந்த நாஞ்சில் நாட்டில், கள்ளிக்கோட்டை ஓடுகளை கொண்ட அழகான வீடுகள், ஜன்னல்களைப் போல் 4ஆக பிரிக்கப்பட்ட வீட்டு முன்கதவுகள் எங்கும் நிறைந்திருக்கும்.
  • வீட்டைச்சுற்றி மா, பாலா, வாழை, தென்னை மரங்கள்.
  • எங்கு நோக்கினும் பசுமைக் கோலத்துடன் நெல் வயல்கள்.
  • எப்போதும் நீர் தேங்கிய குளங்கள்.
  • வைபவங்களில் கட்டாயமாக இடம்பெறும் அவியல், பலவகைபாயாசம்....
இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்று:
"அழிந்து வரும் விவசாயம், 'விலை'நிலங்களாக மாறிவரும் விளைநிலங்கள், கட்டுமான பணிக்காக பெயர்த்து எடுக்கப்படும் மலைகள்" இது இன்றைய நாஞ்சில் நாட்டின் அவலநிலை.

பருவ மழை பருவம் தவறாமல் பெய்துவந்த நிலைமாறி பருவ மழை பொய்த்துப்போன அவலமும் அவ்வப்போது அரங்கேறுகிறது இன்றைய நாஞ்சில் நாட்டில்.
  • காலம் மாறியதே தவிர மேடுபள்ளம் நிறைந்த அன்றைய நாஞ்சில் நாட்டைப்போலவே இன்றைய நாஞ்சில் நாட்டிலும் மேடுபள்ளங்களுக்கு பஞ்சமில்லை.
  • "எங்கு நோக்கினும் பசுமைக் கோலத்துடன் நெல் வயல்கள்" என்ற நிலைமாறி எங்கு நோக்கினும் ரியல் எஸ்டேட்கள்.
  • எப்போதும் நீர் தேங்கிய குளங்கள் போய் வறண்ட குளங்கள், எப்போதும் கழிவுநீர் தேங்கிய சாலைகள்.

மொத்தத்தில் சொல்லப்போனால் எங்கு நோக்கினும் சுகாதார சீர்கேடு, சுரண்டல், அழகு இழந்து கிடக்கிறது எம் நாஞ்சில் நாடு.

நன்றி
நாஞ்சில் தமிழன்.

No comments:

Post a Comment